தாம்பரம்- நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் சாத்தூரில் நின்று செல்லும் - ரெயில்வே பொது மேலாளர் தகவல்
தாம்பரம்- நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் சாத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின், மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்,
மாணிக்கம்தாகூர் எம்.பி. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் பல்வேறு கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்றும், மேம்பாலங்கள் அமைக்கவும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகுல்ஜெயினுக்கு மனு அனுப்பி இருந்தார்.
இதற்கு பொது மேலாளர் பதில் அளித்து எழுதியுள்ளதாவது:-
திருத்தங்கல், சாட்சியாபுரத்தில் மேம்பாலம் அமைக்க ரெயில்வே நிர்வாகம் கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் அனுமதியளித்த நிலையில் திருத்தங்கல் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான வரைபடத்தினை மாநில நெடுஞ்சாலைத்துறை கடந்த மே மாதம் மாற்றி அமைத்தது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் 21-ந்தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது ரெயில்வே வாரியத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சாட்சியாபுரத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.
புதிய ரெயில்கள் இயக்குவது ரெயில்களை நீட்டிப்பது போன்றவற்றுக்கு ரெயில்வே வாரியம் தான் அனுமதியளிக்க வேண்டும். எனினும் தெற்கு ரெயில்வே கூடுதல் ரெயில்களை இயக்குவது, நீட்டிப்பது குறித்த சாத்தியக்கூறுகள் குறித்து ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யும். எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருத்தங்கல் மற்றும் திருமங்கலம் ரெயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் திருத்தங்கல், திருமங்கலம் ரெயில் நிலையங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கான சராசரி டிக்கெட் விற்பனை குறைவாக உள்ளதால் அந்த ரெயில் நிலையங்களில் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வாய்ப்பு இல்லை.
தாம்பரம்-நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சாத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல அனுமதிக்குமாறு தெற்கு ரெயில்வே பரிந்துரை செய்துள்ளது. எனவே சாத்தூர் ரெயில் நிலையத்தில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

Related Tags :
Next Story