புள்ளம்பாடி வாய்க்காலில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை அரியலூர் கலெக்டர் ஆய்வு
புள்ளம்பாடி வாய்க்காலில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை அரியலூர் கலெக்டர் டி.ஜி.வினய் ஆய்வு செய்தார்.
அரியலூர்,
தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், தூத்தூர், குருவாடி ஆகிய பகுதிகளில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் புள்ளம்பாடி வாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை அரியலூர் கலெக்டர் டி.ஜி.வினய் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
குருவாடியில் 23 ஏக்கர் பரப்பளவு கொண்ட வண்ணான் ஏரி ஆக்கிரமிப்பில் இருந்தது. இதனை சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்தி, ஏரி தூர்வாரப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் விவசாயிகள் இலவசமாக மண் எடுத்து கொள்ளலாம். அதேபோல புள்ளம்பாடி வாய்க்கால் பாசன பகுதிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சுக்கிரன் ஏரி, அரசன் ஏரி, தூத்தூர் ஏரி, மற்றும் ஆணைவாரி ஓடை மற்றும் பாசன வாய்க்கால்களில் 32.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.57 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது, இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர்கள் ராமலிங்கம் மற்றும் பாசனதாரர் சங்க உறுப்பினர்கள், விவசாயிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story