கூத்தாநல்லூர் அருகே, பாலம் கட்டும் இடத்தில் மண் சரிவு - கலெக்டர் ஆய்வு
கூத்தாநல்லூர் அருகே பாலம் கட்டும் இடத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கூத்தாநல்லூர்,
கூத்தாநல்லூர் அருகே நாகராஜன்கோட்டகத்தில் ஓகைப்பேரையூர்-கலிமங்கலம் கிராம இணைப்பு பாலம் ரூ.1 கோடியே 50 லட்சத்தில் வெள்ளையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பாலம் கட்டும் இடத்தில் ஆற்றின் கரையோரத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனை திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மண் சரிவு ஏற்பட்ட இடத்தையும், கட்டுமான பணியில் கான்கிரீட் கம்பிகளை உடனடியாக சீரமைக்கவும் அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. ஆய்வின்போது மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியக்கோட்டி, கூத்தாநல்லூர் தாசில்தார் மலர்க்கொடி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story