கிராமங்களில் சுகாதாரம் எப்படி உள்ளது என்பதை போன் மூலம் தெரிவிக்கலாம் - கலெக்டர் தகவல்


கிராமங்களில் சுகாதாரம் எப்படி உள்ளது என்பதை போன் மூலம் தெரிவிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 5 Sept 2019 4:00 AM IST (Updated: 5 Sept 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் சுகாதாரம் எப்படி உள்ளது என்பதை போன் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை,

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து ஊரக பகுதிகளில் ‘தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் -2019’ என்ற மின்னணுவியல் கணக்கெடுப்பு கிராம புறங்களின் சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்து நமது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் கடந்த ஆகஸ்டு 15-ந் தேதி முதல் வருகிற 15-ந் தேதி வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் இந்த கணக்கெடுப்பில் கிராம புறங்களில் வசிக்கும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், மகளிர் குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள் அனைவரும் பங்கு பெற்று தங்கள் கருத்துக்களை மிகவும் எளிய முறையில் 2 வழிகளில் தெரிவித்திடும் வகையில் அரசால் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஆண்ட்ராய்டு மொபைலில் go-o-g-le pl-ay store மூலம் SSG 2019 என்ற ஒரு முறை மட்டுமே பதில் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்து மாநிலம், மாவட்டம் மற்றும் மொழியினை தேர்வு செய்து ஊரக பகுதிகளில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து கேட்கப்படும் 4 கேள்விகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள 4 பதில்களில் தங்கள் பகுதிகளின் நிலை குறித்த பொருத்தமான ஒன்றினை தேர்வு செய்வதன் மூலம் கருத்துக்கள் பதிவு செய்யப்படுகிறது.

ஆண்ட்ராய்டு மொபைல் இல்லாதவர்கள் 18005720112 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணிற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வாய் வழி மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் கருத்துக்கள் பதிவு செய்யப்படுகிறது.

இவ்வாறு மேற்கண்ட 2 வழிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்வதன் மூலம் ஊரகப் பகுதி மக்களுக்கான சுகாதாரம் மற்றும் தூய்மைக்கான செயல்பாடுகளை மேலும் சிறப்பாக முன்னெடுக்க ஏதுவாக அமையும் என்பதால் ஊரக பகுதிகளில் வசிக்கும் அனைவரும் பெருமளவில் தாமாக முன்வந்து தங்களின் மதிப்பு மிக்க பங்களிப்பை அளிப்பதாலேயே இது சாத்தியமாகும்.

எனவே, நமது சிறந்த முறையிலான பங்களிப்பினை அளித்து, திருவண்ணாமலை மாவட்டத்திற்கான சுகாதாரம் மற்றும் நமது ஊரக பகுதிகளின் தூய்மை குறித்த அடுத்த கட்ட பணிகளை அரசால் முன்னெடுப்பதற்கும், உறுதி செய்வதற்கும் ஏதுவாக பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்று தங்களின் சிறப்பான பங்களிப்பினை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story