தண்ணீரை வீணாக செலவு செய்வதை கட்டுப்படுத்த குடிநீர் குழாய்களில் மீட்டர் பொருத்த உத்தரவிடக்கோரி வழக்கு - அரசு சாத்தியமான நடவடிக்கை எடுக்க உத்தரவு
தண்ணீரை வீணாக செலவு செய்வதை கட்டுப்படுத்த குடிநீர் குழாய்களில் மீட்டர் பொருத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு சாத்தியமான நடவடிக்கை எடுக்குமாறு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த சில வருடங்களாக பருவ மழை பொய்த்துவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழ் சென்று விட்டது. 2020-ம் ஆண்டில் தமிழகம் கடும் வறட்சியை சந்திக்கும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இந்த நிலைக்கு காரணம் தமிழக அரசு தான்.
தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி குறித்து நன்கு அறிந்தும் இங்குள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகளில் தேங்கியுள்ள களிமண் மற்றும் பிற கழிவுகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் அணைகள் மற்றும் நீர்நிலைகளில் நீர் தேக்கத்திற்கான பரப்பு குறைந்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், தண்ணீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்துவதில்லை.
ஒருபுறம் குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட, மறுபுறம் தேவைக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மிகக்கடும் வறட்சியை தமிழகம் சந்திக்க உள்ளதாக பலரும் எச்சரித்து வரும் நிலையில் தண்ணீர் வீணாவதை தடுத்து, முறையான பயன்பாட்டை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.
எனவே ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் பயன்பாட்டை கணக்கிட குடிநீர் குழாய் இணைப்புகளில் மீட்டர் பொருத்தி, பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் இந்த முறை வெற்றிகரமாக சில இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதை தமிழகம் முழுவதும் அமல்படுத்தக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தமிழகம் முழுவதும் குடிநீர் குழாய் இணைப்புகளில் மீட்டர் பொருத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், மனுதாரரின் கோரிக்கை குறித்து சாத்தியமான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.

Related Tags :
Next Story