மழைநீர் கால்வாய் பணிகள் தாமதம்: அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
பெரம்பூர் அருகே மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் தாமதமாக நடந்து வருவதால், அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பூர்,
சென்னை பெரம்பூரை அடுத்த புதுநகர், எம்.கே.பி.நகர் பிரதான சாலை பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைப்பதற்கு 3 மாதத்திற்கு முன்பு மாநகராட்சி சார்பில் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
அதன் பின்பு ஆமைவேகத்தில் நடைபெற்ற பணிகள் ஒரு மாதத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்த பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு அப்படியே கிடப்பதால் கார், மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வரும் அப்பகுதிமக்கள், வீடுகளுக்குள் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இதனால் வாகனங்களை சாலைகளில் நிறுத்தி விட்டுச் செல்லும் நிலைமை உள்ளது.
மேலும் அங்கு கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதியில் உள்ள தெருக்கள் வழியே செல்வதால் துர்நாற்றம் வீசி தொற்று நோய் ஏற்படுவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே ஆமை வேகத்தில் நடந்து வரும் இந்த பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்கவும், தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கோரியும், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர், எம்.கே.பி நகர் பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலை அறிந்த எம்.கே.பி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் நேரில் வந்து பணிகளை விரைந்து முடிப்பதாக உறுதியளித்ததின் பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story