உளுந்தூர்பேட்டையில், கரும்புச்சாறு எந்திரத்தில் சிக்கி பெண் சாவு - போலீசார் விசாரணை


உளுந்தூர்பேட்டையில், கரும்புச்சாறு எந்திரத்தில் சிக்கி பெண் சாவு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 Sept 2019 3:30 AM IST (Updated: 5 Sept 2019 10:32 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் கரும்புச்சாறு பிழியும் எந்திரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை, 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தவிடன் மனைவி ராதா (வயது 32). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு கரும்புச்சாறு விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று கடையில் இருந்த எந்திரத்தின் மூலம் ராதா கரும்புச்சாறு பிழிந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் எந்திரத்தில் சிக்கினார். இதில் அவருடைய கை மற்றும் தலைபகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராதா பரிதாபமாக இறந்தார். இதைபார்த்த அவருடைய உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story