திருவள்ளூர் அருகே வாலிபரை தாக்கிய 3 பேருக்கு வலைவீச்சு


திருவள்ளூர் அருகே வாலிபரை தாக்கிய 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Sept 2019 3:45 AM IST (Updated: 5 Sept 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் ஒண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் குமரன். இவரது மகன் பிரபாகரன் (வயது 24). நேற்று முன்தினம் பிரபாகரன் தன்னுடைய நண்பரான அதே பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அவர்கள் திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்த ஒண்டிக்குப்பத்தை சேர்ந்த கண்ணன், தேன்குமார், அருண் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.

இதை கண்ட சுகுமார் தப்பியோடிவிட்டார். பிரபாகரனை சுற்றி வளைத்த மேற்கண்ட 3 பேரும் கையாலும், உருட்டுக்கட்டையாலும் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பிரபாகரன் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கண்ணன், தேன்குமார், அருண் ஆகியோர் மீது வழக் குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Next Story