மோட்டார் சைக்கிள் லாரியில் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் லாரியில் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 6 Sept 2019 3:30 AM IST (Updated: 6 Sept 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் மோட்டார் சைக்கிள் லாரியில் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

காரைக்குடி,

காரைக்குடி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் கவாஸ்கர் (வயது 32). டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் காரைக்குடியில் இருந்து கோவிலூருக்கு சென்று கொண்டிருந்தார். கோவிலூர் அருகே செல்லும்போது மாடு ஒன்று குறுக்கே வந்தது. இதில் நிலை தடுமாறிய அவர் அந்த வழியாக வந்த லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story