ரூ.216½ கோடியில் நடைபெற்று வரும் பாதாளசாக்கடை, குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்


ரூ.216½ கோடியில் நடைபெற்று வரும் பாதாளசாக்கடை, குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2019 3:30 AM IST (Updated: 6 Sept 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் நகராட்சியில் ரூ.216½ கோடியில் நடைபெற்று வரும் பாதாளசாக்கடை, குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடந்தது.

ஆம்பூர், 

ஆம்பூரில் ரூ.165 கோடியே 55 லட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் ரூ.50 கோடியே 90 லட்சம் மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிம் மூலம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த ஆய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டங்களுக்காகவும், பாதாள சாக்காடை திட்டப்பணிகளுக்காவும் சாலைகள் தோண்டப்பட்டதால் சாலைகள் சேதமடைந்துள்ளது. அதனால் அவற்றை விரைந்து சீரமைக்க வேண்டும் எனவும், திட்டப்பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் வீரமணி உத்தரவிட்டார்.

இதில் ஆணையாளர் சவுந்தரராஜன், பொறியாளர் எல்.குமார், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், தாசில்தார் ரமேஷ், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் எம்.மதியழகன், அ.தி.மு.க. விவசாய பிரிவு செயலாளர் ஆர்.வெங்கடேசன், அரசு வழக்கறிஞர் ஜி.ஏ. டில்லிபாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து ஆம்பூர் ரெட்டித்தோப்பு ரெயில்வே குகை வழிப்பாதை பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் சென்று வரமுடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் கே.சி.வீரமணி அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.

அப்போது ரெட்டித்தோப்பு ரெயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் தற்காலிகமாக அப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக நகராட்சி மூலம் கழிவுநீர் கால்வாய் அமைத்து வேறு பகுதி வழியாக கழிவுநீரை திருப்பி விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

அப்போது முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் கே.மணி, சீனிவாசன், அமீன், சுதாகர், கணேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story