திருத்துறைப்பூண்டியில் சைக்கிளில் சென்ற ஓட்டல் தொழிலாளி பஸ் மோதி சாவு
திருத்துறைப்பூண்டியில் சைக்கிளில் சென்ற ஓட்டல் தொழிலாளி பஸ் மோதி பரிதாபமாக இறந்தார்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கோவில்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது45). இவர் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று வேலையை முடித்துவிட்டு தன்னுடைய சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அண்ணாநகர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பஸ் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை தொடர்ந்து தனியார் பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story