தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2019 3:30 AM IST (Updated: 6 Sept 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர், 

தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மதனகாமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொருளாளர் திருமலை, மாவட்ட நிர்வாகிகள் ஜெயராமன், ஞானவேல், முருகையன், தெய்வசகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

2 ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வு கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும். அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு முன்னுரிமை பட்டியல் உடனடியாக வெளியிட வேண்டும். ஏழை, எளிய, நடுத்தர, பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மாணவர்கள் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story