திருவெறும்பூரில் பாய்லர் ஆலை ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
திருவெறும்பூரில் பாய்லர் ஆலை ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பொன்மலைப்பட்டி,
திருச்சி திருவெறும்பூர் மலைக்கோவில் அருகே உள்ள டி நகர் 3-வது ெதருவை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 35). இவர் பாய்லர் ஆலை நிறுவனத்தில் ஊழியராகவும், அங்குள்ள தீயணைப்பு துறையிலும் வேலை பார்த்து வருகிறார். இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவருடைய மனைவி, குழந்தையுடன் சிலம்பரசனின் சொந்த ஊரான மன்னார்குடிக்கு சென்றுள்ளார். சிலம்பரசன் கடந்த 3-ந் ேததி இரவு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வராமல் மறுநாளும் அங்கேயே தங்கி வேலை பார்த்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை சிலம்பரசனின் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் அங்கு வந்து பார்த்தபோது வெளிக்கதவின் பூட்டு திறந்த நிலையிலும், மற்றொரு கதவின் தாழ்ப்பாள் உடைந்த நிலையிலும் கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ கதவு திறந்து கிடந்தது. அதில் இருந்த 6 பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரம், மடிக்கணினி ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து சிலம்பரசன் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ஞானவேல் தலைமையிலான போலீசார், திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story