‘நாங்கள் துண்டுபோட்டால் நீங்கள் குண்டு போடுகிறீர்கள்’ அனந்தராமன் கிண்டல்
நாங்கள் துண்டுபோட்டால் நீங்கள் குண்டு போடுகிறீர்கள் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களை பார்த்து அரசு கொறடா அனந்தராமன் கூறினார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ. சாமிநாதன் எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-
சாமிநாதன்:- புதுவை கோரிமேடு பகுதியை தாண்டியதும் சுங்கச்சாவடி உள்ளது. இதனால் புதுவை பிராந்திய பகுதியான சேதராப்பட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் கூட சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. எனவே சுங்கச்சாவடியை ஆரோவில் தாண்டி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அமைச்சர் நமச்சிவாயம்:- மத்திய அரசின் மொத்த ஏஜெண்டு. பிரதமரின் நேரடி வாரிசு. இதற்கு நீங்களே நடவடிக்கை எடுக்கலாமே.
சாமிநாதன்:- மாநில அரசு சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால் உடனே மாற்றிவிடுவார்கள்.
அமைச்சர் நமச்சிவாயம்:- நீங்கள் ஒரு போன் போட்டாலே மாற்றிவிடுவார்கள். அது மாநில சாலை அல்ல.
சிவா:- எங்களுக்கும் இதனால் பெரிய பாதிப்பு உள்ளது. எதனை யார் சொன்னாலும் அதிலுள்ள உண்மையை பார்க்கவேண்டும்.
தீப்பாய்ந்தான் (காங்):- மாநில எல்லையில் சுங்கச்சாவடி வந்தால் அதை 10 கி.மீ. தூரத்துக்கு அப்பால்தான் வைக்கவேண்டும். இதனால் சேதராப்பட்டு செல்லும் புதுச்சேரி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நான்கூட மக்களை திரட்டி இதற்காக போராட்டம் நடத்தி உள்ளேன்.
அமைச்சர் நமச்சிவாயம்:- இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவார்.
சாமிநாதன்:- இதுவரை எத்தனை கடிதம் எழுதியுள்ளர்கள். மத்திய மந்திரிகளை அடிக்கடி சந்தித்து துண்டுபோட்டுவிட்டு வருகிறீர்கள்.
அரசு கொறடா அனந்தராமன்:- நாங்கள் துண்டுதான் போடுகிறோம். ஆனால் நீங்கள் எங்களுக்கு குண்டு போடுகிறீர்கள்.
அனந்தராமனின் இந்த பதிலை கேட்டு அவையில் சிரிப்பலை எழுந்தது.

Related Tags :
Next Story