நூதன முறையில் மோசடி செய்து 100 சிமெண்டு மூட்டைகளை வாங்கி விற்ற 2 பேருக்கு தர்ம அடி - சென்னிமலை அருகே பரபரப்பு
நூதன முறையில் மோசடி செய்து 100 சிமெண்டு மூட்டைகளை வாங்கி விற்ற 2 பேருக்கு தர்ம அடி விழுந்தது.
சென்னிமலை,
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் முருகேசன் (வயது 38) என்பவர் செங்கல், சிமெண்டு உள்ளிட்ட கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரை நேற்று முன்தினம் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு, நான் புதிதாக சென்னிமலை அருகே ஈங்கூரில் வீடு கட்டி வருகிறேன். எனக்கு 100 மூட்டை சிமெண்டு உடனடியாக வேண்டும். சொல்லும் இடத்துக்கு கொண்டு வந்தால் உடனே பணம் தருகிறேன் என்றார். முருகேசன் உடனடியாக சென்னிமலை திருநகர் பகுதியில் உள்ள மொத்த சிமெண்டு விற்பனையாளர் வைத்தீஸ்வரன் என்பவர் கடைக்கு ஆட்டோவை கொண்டு சென்று சிமெண்டு மூட்டைகளை வாங்கிக்கொண்டு ஈங்கூருக்கு சென்றார்.
அங்கு சென்றதும் சிமெண்டு மூட்டைகளை கொண்டு வர சொன்னவரை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அந்த நபர் சிமெண்டு மூட்டைகளை இறக்குங்கள். பிறகு உங்களுக்கு நான் பணம் தருகிறேன் என கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த முருகேசன் பணத்தை கொடுத்தால் தான் மூட்டைகளை இறக்குவேன் என கூறிவிட்டு மீண்டும் சென்னிமலைக்கே திரும்பி விட்டார்.
இதைத்தொடர்ந்து சென்னிமலையில் உள்ள மற்றொரு கட்டிட பொருட்கள் விற்பனை செய்து வரும் பன்னீர்செல்வம் என்பவருக்கு இதே போல் ஒருவர் செல்போனில், 100 மூட்டை சிமெண்டு வேண்டும் என கேட்டுள்ளார். பன்னீர்செல்வமும் வைத்தீஸ்வரனுக்கு போன் செய்து எனக்கு 100 மூட்டை சிமெண்ட் வேண்டும் நான் ஈங்கூருக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே வைத்தீஸ்வரன் கடையில் இருந்து முருகேசன் மூலம் ஈங்கூருக்கு கொண்டு சென்ற சிமெண்ட் மூட்டைகள் திரும்பி வந்ததால் வைத்தீஸ்வரனுக்கு சந்தேகம் ஏற்பட்டு பன்னீர்செல்வத்திடம் இதுபற்றி கூறினார்.
இதற்கிடையே சிறிது நேரத்தில் ஈரோடு அருகே திண்டலில் உள்ள ஒரு கட்டிட பொருள் விற்பனை செய்து வரும் பெண் ஒருவர் வைத்தீஸ்வரனை தொடர்பு கொண்டு, ஈங்கூருக்கு 100 மூட்டை சிமெண்டு கேட்கிறார்கள். நீங்கள் அனுப்பி விடுகிறீர்களா என கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபரை பிடிக்க முடிவு செய்தனர். இதையடுத்து அந்த மர்ம நபர் கடைசியாக கேட்ட திண்டல் கடையில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அவரை தொடர்பு கொண்டனர். அதற்கு அந்த நபர் ஈங்கூரில் உள்ள ஒரு இரும்பு தொழிற்சாலை அருகில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட மேஸ்திரி இருப்பார். அங்கு சிமெண்ட் மூட்டைகளை இறக்குங்கள். நான் வந்து பணம் தருகிறேன் என்றார். வேன் டிரைவரும் அந்த வீட்டிற்கு சென்றார். அந்த வேனுக்கு பின்னாடியே கட்டிட பொருள் விற்பனை செய்யும் கடைக்காரர்களும் ஒரு காரில் பின் தொடர்ந்து சென்றார்கள்.
அந்த நபர் சொன்ன இடத்தில் சிமெண்ட் மூட்டைகளை இறக்கும்போது, காரில் இருந்தவர்கள் சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டனர். பின்னர் அங்கிருந்த மேஸ்திரிக்கு அந்த மர்ம நபர் போன் செய்து, நான் ஏற்கனவே கூறியபடி 350 ரூபாய் விலையுள்ள மூட்டைகளை உங்களுக்கு 250 ரூபாய்க்கு கொண்டு வந்து விட்டேன். நான் தற்போது ஈங்கூர் பஸ் நிறுத்தம் அருகில் நிற்கிறேன். அவசரமாக செல்ல வேண்டும். அதனால் சிமெண்ட் மூட்டைக்கு உரிய பணத்தை இங்கு கொண்டு வாருங்கள் என கூறியிருக்கிறார். அதற்கு மேஸ்திரி, தற்போது என்னிடம் ரூ.20 ஆயிரம் மட்டுமே பணம் உள்ளது என்றும், மீதி பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் அந்த நபர், ரூ.20 ஆயிரமே போதும் மீதியை பிறகு வாங்கி கொள்கிறேன் உடனடியாக வாருங்கள் என கூறியுள்ளார். மேஸ்திரியும் ஒரு மொபட்டில் ஈங்கூர் பஸ் நிறுத்தத்திற்கு சென்றார். அப்போது கடை உரிமையாளர்களும் மேஸ்திரி சென்ற மொபட்டை பின் தொடர்ந்து சென்றனர்.
அப்போது ஈங்கூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த 2 பேர் மேஸ்திரியை வழிமறித்து பணத்தை கேட்டனர். மேஸ்திரியும் பணத்தை அந்த நபரிடம் கொடுத்தபோது பின்னாடியே வந்த கட்டிட பொருள் விற்பனை கடைக்காரர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கொண்டனர். பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது, அதில் ஒருவர் திருப்பூரை சேர்ந்த பாபு (வயது 58) என்றும், மற்றொருவர் திருப்பூர் அருகே பழங்கரையை சேர்ந்த மஞ்சுநாதன் (32) என்றும் தெரியவந்தது. கட்டிட பொருட்கள் விற்பனையாளர்கள் விசாரித்துக்கொண்டு இருந்தபோதே அங்கு நின்று கொண்டு இருந்த பொதுமக்கள் இருவரையும் சரமாரியாக தாக்க தொடங்கினார்கள்.
பிடிபட்டவர்கள் ஏற்கனவே பெருந்துறை, சென்னிமலை மற்றும் பல மாவட்டங்களில் இதுபோல் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story