துணை ஆணையர் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க தடை கோரி வழக்கு - அறநிலையத்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
அறநிலையத்துறையில் துணை ஆணையர் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கில் அறநிலையத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
அறநிலையத்துறையில் செயல் அலுவலர்களாக சேர்ந்து உதவி ஆணையர்களாக பணியாற்றி வரும் ஜீவானந்தம், சூரியநாராயணன், சுரேஷ், இளையராஜா, செல்வி, ராணி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
அறநிலையத்துறையில் பதவி உயர்வின் மூலம் உதவி ஆணையர்களாக பணிபுரிந்து வருகிறோம். அடுத்ததாக எங்களுக்கு துணை ஆணையர் பதவி உயர்வு வழங்க வேண்டும். துணை ஆணையர் பணியிடங்கள் தமிழ்நாடு நீதித்துறை பணியில் இருப்பவர்கள் இடமாறுதல் மூலமாகவும், உதவி ஆணையர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும், நேரடி நியமனம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும். செயல் அலுவலராக இருந்து உதவி ஆணையர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும், மீதமுள்ள 40 சதவீத இடங்களில் நேரடியாக உதவி ஆணையர்களாக நியமிக்கப்பட்டவர்களையும் துணை ஆணையர் பதவிக்கு நியமிப்பார்கள். இந்த பதவி உயர்வுக்காக அறநிலையத்துறையில் உதவி ஆணையர் பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்படும்.
ஆனால் துணை ஆணையர் பணி நியமனத்தில் இந்த விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. நேரடியாக உதவி ஆணையர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு தான், துணை ஆணையர் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. எனவே நேரடியாக துணை ஆணையர் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். உதவி ஆணையர் பணி மூப்பு பட்டியல் தயாரித்து, அதன்பின் துணை ஆணையர் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி வேலுமணி முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், இதுதொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை செயலாளர், ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Tags :
Next Story