“மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்வது ஆசிரியர்களின் கடமை” - அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு


“மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்வது ஆசிரியர்களின் கடமை” - அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு
x
தினத்தந்தி 7 Sept 2019 4:30 AM IST (Updated: 7 Sept 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்வது ஒவ்வொரு ஆசிரியர்களின் கடமை என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பேசினார்.

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் குரு மல்லேஷ் பிரபு வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசியதாவது:-

சமுதாயத்தில் உள்ள அனைவரது அறிவுக் கண்களை திறப்பவர்கள் ஆசிரியர்கள் என்பதால் சமூகத்தில் அனைவராலும் அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். ஆசிரியர்களின் மதிப்பு மற்றும் மாண்பை உயர்த்தியவர் முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன்.

ஆசிரியர்கள் அனைவரும் சிறந்தவர்கள் தான். இந்த ஆசிரியர் தின விழாவில் அனைத்து ஆசிரியர்களின் சேவையை நாம் நினைத்து பார்க்க கடமைப்பட்டுள்ளோம். ஒரு சமூகம் கலாசாரம் மற்றும் பண்பாட்டில் சிறந்து விளங்கினால் அதற்கு அடிப்படை காரணம் சிறந்த கல்வி ஆகும். இந்தியா கலாசாரம் மற்றும் பண்பாட்டில் சிறந்து விளங்க காரணம் இந்தியா ஒரு அறிவார்ந்த சமுதாயமாக இருந்து வந்ததுதான்.

படைப்பாற்றலும், தெளிவான சிந்தனையும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க உதவும். இத்தகைய பண்புகளை மாணவர்களிடம் வளர்த்து அவர்களின் தனித்திறமைகளை வெளிக் கொண்டு வருவது ஒவ்வொரு ஆசிரியர்களின் கடமையாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story