சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு


சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 7 Sept 2019 5:00 AM IST (Updated: 7 Sept 2019 4:56 AM IST)
t-max-icont-min-icon

சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை நேற்று மாலை 5.30 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது அ.தி.மு.க. சட்டப்பேரவை குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசுகையில், ‘சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்தது எப்போது எடுத்துக்கொள்ளப்படும். தீர்மானம் கொடுத்து 14 நாட்கள் ஆகிறது. நாளையுடன் (அதாவது இன்று) சட்டசபை முடிகிறது. அந்த கடிதம் பரிசீலனையில் இருக்கிறதா? அது எடுத்துக் கொள்ளப்பட்டதா? இல்லையா? சிறப்பு சட்டப்பேரவை கூட்டி முடிவு செய்ய போகிறீர்களா? என்பதை தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ‘சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும். சபாநாயகரை யாரும் வலியுறுத்த முடியாது’ என்றார்.

சபாநாயகர் சிவக்கொழுந்து கூறுகையில், சட்டசபை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், அசனா (அ.தி.மு.க.), டி.பி.ஆர்.செல்வம், என்.எஸ்.ஜெ.ஜெயபால் (என்.ஆர்.காங்கிரஸ்), சங்கர், செல்வகணபதி (பாரதீய ஜனதா) ஆகியோர் ஒட்டுமொத்தமாக சட்டசபையில் இருந்து வெளியேறினார்கள்.

Next Story