திருப்பூரில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின் போது பனியன் நிறுவனத்திற்குள் புகுந்து சூறையாடிய 4 பேர் கைது
திருப்பூரில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின்போது பனியன் நிறுவனத்திற்குள் புகுந்து சூறையாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 16 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அனுப்பர்பாளையம்,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூரில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டன. பின்னர் அந்த சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.
இந்த நிலையில் திருப்பூரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் கடந்த 5-ந் தேதி புதிய பஸ் நிலையம் பகுதிக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. அப்போது அங்கேரி பாளையம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையையும், புதிய பஸ் நிலையம் பகுதிக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது. அப்போது வாகனத்தின் முன்பு பேரணியாக சென்ற சிலர், திடீரென்று அங்கிருந்த பனியன் நிறுவனத்திற்குள் புகுந்து, ஜன்னல் கண்ணாடியை அடித்து நொறுக்கி, அங்கிருந்த பூந்தொட்டிகளை சேதப்படுத்தியதோடு, பனியன் நிறுவனத்தையும் சூறையாடி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை தடுக்க முயன்ற பனியன் நிறுவன ஊழியர்கள் 2 பேரையும் அந்த கும்பல் தாக்கி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில், அவர்களையும் மீறி பனியன் நிறுவனம் சூறையாடப்பட்டதற்கு பல்வேறு கட்சிகள், தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்ததோடு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் பனியன் நிறுவனத்திற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி, சூறையாடிய ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பனியன் நிறுவன உரிமையாளர் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பனியன் நிறுவனத்திற்குள் புகுந்து சூறையாடியதாக இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடி வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் அங்கேரிபாளையம் சிங்காரவேலன்நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 23), ராதாகிருஷ்ணன் (19), மாதேஸ்வரன் (19), பிச்சம்பாளையம்புதூரை சேர்ந்த உதயகுமார் (32) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 16 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story