பாப்புலர் முதலியார் வாய்க்கால் கரையில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்


பாப்புலர் முதலியார் வாய்க்கால் கரையில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 8 Sept 2019 3:00 AM IST (Updated: 8 Sept 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

பாப்புலர் முதலியார் வாய்க்கால் கரையில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி தளவாபாளையம் வழியாக பாப்புலர் முதலியார் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க் காலின் இரு பக்கத்திலும் வசிக்கும் சிலர் கரையை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டி பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் பொதுப் பணித்துறை அதிகாரிகள் வந்து வாய்க்கால் கரையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அகற்றினர்.

இதையடுத்து நேற்று 2-வது நாளாக தளவாபாளையம் கிழக்கு வீதியில் வாய்க்கால் ஓரத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை புகளூர் வட்டார தாசில்தார் ராஜராஜன், வருவாய்துறை ஆய்வாளர் சக்கரபாணி, கிராம நிர்வாக அலுவலர் பிரேமா, பொதுப்பணித்துறை அலுவலர் சக்திவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் பொக்லைன் உதவியுடன் அகற்றினர். இதனால் அப்பகுதியில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

Next Story