நெமிலி அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல்: ஆசிரியர் உள்பட 2 பேர் பலி


நெமிலி அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல்: ஆசிரியர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 8 Sept 2019 3:30 AM IST (Updated: 8 Sept 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

நெமிலி அருகே மோட் டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் ஆசிரியர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரி ழந்தனர்.

பனப்பாக்கம், 

நெமிலியை அடுத்த சயனபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அரிதாஸ் (வயது 45). இவர், அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் அரிதாஸ் அவருடைய மனைவி ஷோபா பெயரில் நெமிலியில் சி.பி.எஸ்.இ. பள்ளி நடத்தி வந்தார்.

அரிதாஸ் நேற்று மாலை சேந்தமங்கலத்தில் இருந்து நெமிலிக்கு மோட்டார் சைக்கி ளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே அரக்கோ ணத்தை சேர்ந்த சுரேஷ் (36) என்பவர் நெமிலியில் இருந்து மோட்டார் சைக்கிளில் அரக் கோணம் நோக்கி சென்றார். சேந்தமங்கலம் பாலம் அருகே அரிதாஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், சுரேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அரிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுரேஷ் படுகாயம் அடைந்தார். உடனே அந்த பகுதி மக்கள் சுரேசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நெமிலி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் பலியான அரிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து நெமிலி போலீஸ் இன்ஸ் பெக்டர் பாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story