மாவட்ட செய்திகள்

திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + young lady Suicide by hanging

திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கோயம்பேட்டில் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி,

கோயம்பேடு சின்மயா நகர் குலசேகரபுரம், வேதா சாலையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 60). இவரது மகள் பிரியங்கா (29), பட்டப்படிப்பு முடித்தவர். நேற்று முன்தினம் இரவு அறைக்குள் சென்ற பிரியங்கா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது பிரியங்கா தூக்குப்போட்ட நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்துபோன பிரியங்காவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.


விசாரணையில், பிரியங்காவிற்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து மாப்பிள்ளையை பார்த்து உள்ளனர். இந்த நிலையில் 9-ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமணத்தில் பிரியங்காவிற்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்துவந்த பிரியங்கா அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கு வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதலனுடன் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
பண்ருட்டியில் முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலனுடன் ரெயில் முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2. ராதாபுரம் அருகே, இளம்பெண் வி‌‌ஷம் குடித்து தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
ராதாபுரம் அருகே இளம்பெண் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
3. கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. சங்கரன்கோவிலில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
சங்கரன்கோவிலில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
5. போடிமெட்டு மலைப்பாதையில் உடல் வீச்சு: இளம்பெண் கற்பழித்து கொலை?
போடிமெட்டு மலைப்பாதையில் பிணமாக கிடந்த இளம்பெண், கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.