7-வது மாடியில் இருந்து வீசி 3½ வயது சிறுமி கொலை: ஒருவர் கைது


7-வது மாடியில் இருந்து வீசி 3½ வயது சிறுமி கொலை: ஒருவர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2019 4:30 AM IST (Updated: 8 Sept 2019 3:32 AM IST)
t-max-icont-min-icon

மும்பை, கொலபாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் 3½ வயது சிறுமியை, நேற்று அதேபகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கட்டிடத்தின் 7-வது மாடிக்கு அழைத்து சென்றார். இந்த நிலையில் திடீரென சிறுமியை அவர் மாடியில் இருந்து தூக்கி வீசினார்.

மும்பை,

உயரத்தில் இருந்து கீழே விழுந்து தரையில் மோதிய சிறுமி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி கொலைக்கு காரணமான நபரை கைது செய்தனர்.

சிறுமியை கொலை செய்தவர் அவளது தந்தையின் நண்பர் என கூறப்படுகிறது. அவர் ஏன் இத்தகைய கொடூரமான செயலைச் செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story