மீண்டும் கட்டுமான பணிகளை தொடங்கி வத்திராயிருப்பு போக்குவரத்து பணிமனையை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை - அதிகாரிகளுடன், எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
பாதியிலேயே நிறுத்தப்பட்ட வத்திராயிருப்பு அரசு போக்குவரத்து பணிமனையின் கட்டுமான பணியை தொடங்கி அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியை சுற்றி முக்கிய கோவிலான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மற்றும் சுற்றுலாத்தலமான பிளவக்கல் மற்றும் கோவிலாறு அணைகள் உள்ளன.
இப்படி முக்கிய நகரமாக உள்ள இந்த பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய போக்குவரத்து பணிமனை கட்ட நிதி ஒதுக்கியது. இந்தநிலையில் புதிய போக்குவரத்து பணிமனை கட்டும் பணிகள் தொடங்கி 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பணிகள் முடிவடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. காரணம் போதிய நிதி பற்றாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது என தெரியவந்தது.
இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா மற்றும் மதுரை மண்டல போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் முருகேசன் ஆகியோர் போக்குவரத்து பணிமனையை ஆய்வு செய்தனர். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் வழங்குவதாக உறுதியளித்தார். இதனால் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு போக்கு வரத்து பணிமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கட்டுப்பாட்டு பணிக்கு தேவைப்படும் நிதியை பல்வேறு அரசு திட்ட நிதிகள் மூலம் சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
Related Tags :
Next Story