மேலும் 2 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி; பா.ஜனதா மேலிடம் ஆலோசனை
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
பெங்களூரு,
எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது. இந்த அரசில் லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயண், கோவிந்த் கார்ஜோள் ஆகிய 3 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
துணை முதல்-மந்திரி பதவி கிடைக்காததால் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவின் ஆதரவாளர்கள் தீவிர போராட்டம் நடத்தினர். இதனால் மேலும் 2 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பழங்குடியினத்தை சேர்ந்த மந்திரி ஸ்ரீராமுலு மற்றும் குருபா சமூகத்தை சேர்ந்த ஒருவர் என மேலும் 2 பேருக்கு துணை முதல்-மந்திரி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கினால் துணை முதல்-மந்திரிகளின் எண்ணிக்கை 5 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story