ஈரோட்டில் சிறுமி பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
ஈரோட்டில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோட்டை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அந்த சிறுமி கடந்த 4-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை வலைவீசி தேடி வந்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், ‘அந்த சிறுமியை ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவாநகரை சேர்ந்த சம்பத்தின் மகன் முத்து (வயது 24) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது’ தெரியவந்தது.
இந்த நிலையில் முத்து அந்த சிறுமியுடன் ஈரோடு பஸ் நிலையம் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று முத்துவை கைது செய்ததுடன், அந்த சிறுமியையும் மீட்டனர். அதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், ‘சிறுமியை முத்து கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது’ தெரியவந்தது. இதையடுத்து முத்துவின் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கைதான முத்து ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story