பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெட், செட், பி.எச்.டி. ஆசிரியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் - மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெட், செட், பி.எச்.டி. ஆசிரியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் - மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 9 Sept 2019 4:15 AM IST (Updated: 9 Sept 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெட், செட், பி.எச்.டி. ஆசிரியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

மலைக்கோட்டை,

தமிழ்நாடு நெட், செட், பி.எச்.டி. ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஜவஹர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஆறுமுகம் வரவேற்றார்.

இதில் மாநில பொதுச் செயலாளர் முனைவர் ரமே‌‌ஷ், தலைமை நிலைய செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள். முடிவில் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் தகுதியுடைய ஆசிரியர்களை உதவிப்பேராசிரியராக நியமிக்க கோரி கடந்த 2 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த கோரிக்கையை நிராகரிக்கும் விதமாக உயர்கல்வித் துறையின் உதவிப்பேராசிரியர் நியமன அறிவிப்பு அமைந்துள்ளது. இதை கண்டிப்பதுடன், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை உயர்கல்வி துறை வழங்க வேண்டும்.

உதவி பேராசிரியர் நியமனத்தில் தகுதி பெற்ற நெட், செட், பி.எச்.டி. ஆசிரியர்களுக்கான 50 சதவீத ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story