செம்பனார்கோவில் ஊராட்சி பகுதியில் குடிமராமத்து திட்ட பணிகள் - கலெக்டர் ஆய்வு


செம்பனார்கோவில் ஊராட்சி பகுதியில் குடிமராமத்து திட்ட பணிகள் - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Sept 2019 4:00 AM IST (Updated: 9 Sept 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் ஊராட்சி பகுதியில் குடிமராமத்து திட்ட பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொறையாறு,

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பொதுப்பணித்துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குடிமராமத்து திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நாகை கலெக்டர் சுரேஷ் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய் தார். பொறையாறு அருகே அனந்தமங்கலம், தில்லையாடி, திருவிடைக்கழி ஆகிய கிராமங்களில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளஆதாரத்துறை சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மகிமலைஆறு தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து கிடாரங்கொண்டான் கிராமத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் ஆலங்குளம் தூர்வாரும் பணிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் தலையுடையவர்கோவில்பத்து, காட்டுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு சென்று குடிமராமத்து பணிகளை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது பொதுப்பணிதுறை உதவிசெயற்பொறியாளர் சண்முகம், செம்பனார்கோவில் ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருண், உதவி பொறியாளர்கள் தியாகு, சோமசுந்தரம், மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story