ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Sep 2019 10:15 PM GMT (Updated: 8 Sep 2019 8:29 PM GMT)

நாகையில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம், 

நாகையில் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திட்ட தலைவர் சிவராஜன் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர்கள் பாஸ்கர், இளவரசன், குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட செயலாளர் கலைச்செல்வன் கலந்துகொண்டு பேசினார்.

ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும். தமிழக மின்வாரிய மறுசீரமைப்பை கைவிட வேண்டும். மின்வினியோக சட்டத்திருத்த மசோதா 2018-ஐ கைவிட வேண்டும். டிசம்பர் 1- ந்தேதி முதல் மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள 55 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

மின்வினியோகத்தை தனியாருக்கு அளித்து மின்வாரியத்தை சீரழிக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும். மின்துறையில் பணி நியமனம், பணியிட மாற்றத்தில் அரசியல் தலையீட்டை கொண்டு வரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

Next Story