அழகமாநேரி ஊராட்சி பகுதியில் குடிமராமத்து திட்டத்தில் வரத்துக்கால்வாய்கள் சீரமைப்பு - கலெக்டர் ஆய்வு
அழகமாநேரி ஊராட்சி பகுதியில் குடிமராமத்து திட்டத்தில் வரத்துக்கால்வாய்கள் சீரமைப்பு பணிகள் நடைபெறு கின்றன. இந்த பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
சிவகங்கை,
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், அழகமாநேரி ஊராட்சிப் பகுதியில் பொதுப்பணித் துறையின் மூலம் முதல்-அமைச்சரின் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் பெரியார் பாசனக்கால்வாய் பகுதியில் உள்ள வரத்துக்கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
அதில் பாசனக்கால்வாயில் உள்ள 48-வது மதகு பிரிவிலிருந்து பாசனக்கண்மாய்களுக்கு தண்ணீர் வருகிற வரத்துக்கால்வாய்களையும் மற்றும் கண்மாய்களையும் ரூ.3 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை கலெக்டர் ஜெயகாந்தன் நேரில் சென்று பார்வை யிட்டார்.
ஒவ்வொரு கண்மாயிலும் புதிய மடை கட்டப்படுவதையும் மற்றும் கழுங்கு சீரமைக்கப்பட்டு வருவதையும் அவர் ஆய்வு செய்தார். மேலும் சீரமைக்கும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை பொறியாளர் சுந்தரப்பன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருள்மணி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story