விருதுநகர் அருகே பஸ் மோதி, போலீஸ்காரர் பலி


விருதுநகர் அருகே பஸ் மோதி, போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 9 Sept 2019 4:00 AM IST (Updated: 9 Sept 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே அரசு பஸ் மோதியதில் ஆயுதப்படை போலீஸ்காரர் உயிரிழந்தார்.

விருதுநகர்,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார்(வயது26). இவர் ராமநாதபுரத்தில் ஆயுதப்படை போலீஸ்காரராக இருந்தார்.

சிவகுமார் நேற்று விருதுநகரில் நடந்த ஒரு திருமணவிழாவில் கலந்து கொண்டார். பின்னர் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டுச்சென்றார்.

விருதுநகர் கே. உசிலம்பட்டி அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சிவகுமார் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து பாண்டியன் நகர் போலீசார் விசாரணை நடத்தி நிலக்கோட்டையை சேர்ந்த பஸ் டிரைவர் முத்துக்குமார்(47) என்பவரை கைது செய்தனர்.

Next Story