மதுரையில் கணினி விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து
மதுரையில் நேற்று இரவு கணினி விற்பனை கடையில் மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
மதுரை,
மதுரை வடக்குவெளி வீதியில் ஒரு கணினி விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. இங்கு கணினி, மடிக்கணினி, பிரிண்டர் என கணினி தொடர்பான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கடையின் முன் பகுதியில் விற்பனை பிரிவும், பின் பகுதியில் குடோன் உள்ளது. குடோனில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கணினி மற்றும் கணினி உபகரணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நேற்று இந்த கடை இரவு 8 மணி வரை திறந்து இருந்தது.
அதன்பின் கடை அடைக்கப்பட்டது. கடையின் முன்பு இரவு காவலாளி பணியில் இருந்தார். சிறிது நேரத்தில் கடைக்குள் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி, இதுபற்றி கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் இங்கு வந்து பார்த்துவிட்டு, உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக திடீர்நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 வாகனங்களில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அப்போது அந்த கடையின் உள்ளே இருந்து கரும் புகை வெளியில் வந்து கொண்டு இருந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் கடையின் கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து, தீயை அணைத்தனர். கடையின் பின் பகுதியில் இருந்த குடோனுக்கு பக்கவாட்டு பகுதியில் இருந்த வாசல் வழியாகவும் தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அங்கிருந்த கணினி உள்ளிட்ட பொருட்களில் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதனால் மேலும் சில தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன.
மொத்தம் 4 தீயணைப்பு வண்டிகளும், சில மாநகராட்சி லாரிகளில் தண்ணீர் நிரப்பி கொண்டு வரப்பட்டு, தீ அணைக்கும் பணியில் வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். மாவட்ட தீயணைப்பு படை அதிகாரி மற்றும் போலீசாரும் குவிக்கப்பட்டனர். சுமார் 2½ மணி நேர போராட்டத்துக்கு பின்பு தீ முழுமையாக அணைக்கப்பட் டது. இந்த சம்பவத்தையடுத்து வடக்கு வெளி வீதியில் வந்த வாகனங்கள் தமிழ்சங்கம் ரோடு வழியாக மாற்றி விடப்பட்டன. கடையில் பற்றி எரிந்த தீ, அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை பணியிலும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.
மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “மின் கசிவால் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான கணினி, உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலாயின” என்று தெரிவித்தனர்.

Related Tags :
Next Story