மாவட்ட செய்திகள்

மதுராந்தகம் அருகே பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம் + "||" + Near Maduranthanam The bus topples 30 people injured

மதுராந்தகம் அருகே பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்

மதுராந்தகம் அருகே பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்
மதுராந்தகம் அருகே பஸ் கவிழ்ந்து 30 பேர் படு காயம் அடைந்தனர்.
மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இருந்து காஞ்சீபுரத்திற்கு எல்.எண்டத்தூர், உத்திரமேரூர் வழியாக பஸ் சென்றது. அந்த பஸ் தண்டலம் பகுதியில் செல்லும்போது மாடு குறுக்கே வந்தது. அப்போது டிரைவர் பிரேக் பிடித்தார்.


டிரைவரின் கட்டுபாட்டை இழந்து பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் 30 பேர் படுகாயம் அடைந்து மேல்மருவத்தூர், மதுராந்தகம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.