திருத்துறைப்பூண்டியில், வீட்டில் பதுக்கிய 110 லிட்டர் சாராயம் பறிமுதல் - பெண் கைது
திருத்துறைப்பூண்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மீனாட்சி வாய்க்கால் பகுதியில் ஒரு வீட்டில் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். இதில் மீனாட்சி வாய்க்கால் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ஏலம்பாள்( வயது 48) என்பவர் வீட்டின் பின்புறத்தில் 110 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏலம்பாளை கைது செய்தனர்.
Related Tags :
Next Story