மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் ரூ.20 லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணி தீவிரம் + "||" + Work on setting up a park at Kanyakumari Venkatasalapathi temple at Rs.20 lakhs

கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் ரூ.20 லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணி தீவிரம்

கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் ரூ.20 லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணி தீவிரம்
கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் ரூ.20 லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் ஏழுமலையான் வெங்கடாசலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள் அம்மாள், கருட பகவான் ஆகிய சன்னதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.


தற்போது இந்த கோவில் வளாகத்தில் அர்ச்சகர்கள் தங்குவதற்காக 8 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. முடிகாணிக்கை செலுத்தும் மண்டபம் உள்பட பல பணிகள் நடந்து வருகிறது. மேலும் கோவிலின் முன்பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் நவீன பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்த பூங்காவில் கடல் காற்றை தாங்கி வளரும் தன்மை கொண்ட புல்வெளி மற்றும் அலங்கார செடிகள் வளர்க்கப்படுகிறது.

மேலும் கோவிலின் தெற்கு பக்கம் உள்ள கடற்கரை வளாகத்தில் 25 அடி உயரத்தில் பெரிய அளவில் சங்கு, சக்கரம், நாமம் போன்ற வடிவமைப்பில் மின் விளக்குகள் வைக்கப்படுகிறது. அதே போல இந்த மாத இறுதிக்குள் லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.