முன்னாள் படைவீரர்கள் மையத்திற்கு சொந்தமான 11 கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - அதிகாரிகள் நடவடிக்கை
முன்னாள் படை வீரர்கள் மையத்திற்கு சொந்தமான 11 கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் முன்னாள் படைவீரர்கள் மையத்திற்கு சொந்தமான 11 கடைகளின் ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டது. கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் தெய்வநாயகி, தாசில்தார் ஜெய்சங்கர், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில்தாமஸ், வருவாய் ஆய்வாளர் சக்தி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.
இது குறித்து முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் பிரேமா கூறியதாவது:- முன்னாள் படைவீரர் மையத்திற்கு சொந்தமான இடத்தில் வருவாய் ஈட்டும் வகையில் 11 கடைகள் கட்டப்பட்டு பொது ஏலத்தின் மூலம் உரிமத்திற்கு விடப்பட்டன. பொது ஏலத்தின் மூலம் உரிமம் எடுப்பவர் 11 மாத காலத்திற்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கவும், பொதுப்பணித்துறை நிர்ணயம் செய்யும் உரிம கட்டணத்தை செலுத்த ஒப்புக் கொண்டும், அனைத்து ஒப்பந்தங்களையும் உள்ளடக்கி, உரிமத்திற்கு 11 மாதங்களுக்கு ஒரு முறை 8 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்படும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கடைகள் வாடகைக்கு விடப்பட்டது.
இந்த நிலையில், மையக் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. இதே போல் மையக்கடைகளையும் இடித்துவிட்டு, புதிதாக கட்டிடம் கட்டப்பட உள்ளது என்பதால், கடையினை நடத்தி வந்த உரிமைதாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடையை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், கடையை நடத்தி வந்தவர்கள் காலி செய்யாமல் தொடர்ந்து கடையினை நடத்தி வந்தனர். இம்மைய கட்டிடத்திற்கு மாவட்ட கலெக்டர் முப்படைவீரர் வாரியத்திற்கு தலைவர் என்பதால், இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, முதன்முதலில், 1997-ம் ஆண்டு 11 மாத காலத்திற்கு மட்டும் உரிமத்திற்கு விட்டவர்களின், வீட்டு முகவரிக்கு சென்று தல ஆய்வு செய்யப்பட்டது. இதில் 5 பேர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டனர். மீதமுள்ளவர்கள் கடையினை வேறு நபர்களுக்கு உள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது தெரிந்தது.
எனவே, 11 கடைகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் பல ஆண்டுகளாக முன்னாள் படைவீரர் நல மையக் கட்டிடத்திற்கு வாடகை எதுவும் செலுத்தாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் முன்னாள் படைவீரர் நல மையக் கட்டிடத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு, பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கலெக்டர் உத்தரவுப்படி 11 கடைகளின் ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றப்பட்டு, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story