ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்கக்கோரி சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - நாகையில் நடந்தது


ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்கக்கோரி சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 11 Sept 2019 3:15 AM IST (Updated: 11 Sept 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்கக்கோரி நாகையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. சுமைதூக்கும் தொழிலாளர் சம்மேளன சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கி னார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராமலிங்கம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பாஸ்கர், நகர குழு உறுப்பினர்கள் குணா, சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராமன் கலந்துகொண்டு பேசினார்.

நுகர்பொருள் வாணிபக்கழக சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு, எப்.சி.ஐ. தொழிலாளர்களுக்கு இணையான கூலி வழங்க வேண்டும். சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.

பணியின் போது விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். பி.எப்., இ.எஸ்.ஐ. திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த திருப்பூண்டி செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story