நாகர்கோவிலில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு- ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு- ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Sep 2019 11:15 PM GMT (Updated: 10 Sep 2019 7:58 PM GMT)

நாகர்கோவிலில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி, மேகாலயா ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர், நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில்ரமானியை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர்.

இதே போல் நாகர்கோவிலிலும் நேற்று வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லாமல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி கோர்ட்டு முன் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அகில இந்திய வக்கீல்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மரிய ஸ்டீபன் தலைமை தாங்கினார். மூத்த வக்கீல் செலஸ்டின், பொது செயலாளர் பரமதாஸ், தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு பொருளாளர் மகேஷ் உள்பட பல வக்கீல்கள் கலந்துகொண்டனர். கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள்.

வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தையொட்டி கோர்ட்டு முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story