நெய்வேலி, புவனகிரியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன பொதுக்கூட்டம்
நெய்வேலி, புவனகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நெய்வேலி,
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நெய்வேலி இந்திரா நகரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்டார, நகர தலைவர்கள் வேலுசாமி, குள்ளபிள்ளை, முருகன், சக்ரியாஸ், ராமச்சந்திரன், கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமச்சந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் குமரி மகாதேவன் கண்டன உரையாற்றினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், ஓவியர் ரமேஷ், கிஷோர், பொருளாளர் ராஜன், சீத்தாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து புவனகிரி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் புவனகிரி பாலம் அருகே கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பழனிசாமி, தலைமை கழக பேச்சாளர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புவனகிரி நகர தலைவர் மெக்கானிக் கண்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் மணிரத்தினம் கலந்து கொண்டு ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து பேசினார்.
இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், விவசாய பிரிவு தலைவர் கே.ஜி.குமார், சரண், செந்தில்நாதன், ஜெயச்சந்திரன், விநாயகம், பாலதண்டாயுதம், சம்பத், ரவிச்சந்திரன், விஜய்பிரபு, அன்பழகன், கிருஷ்ணன், திருவாசகமூர்த்தி, ராஜாராமன், ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story