அம்பரீஷ் இருந்த இருக்கையில் அமர்ந்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் சுமலதா பெருமிதம்
மண்டியாவில் எம்.பி. அலுவலகத்தை திறந்துவைத்த நடிகையும், எம்.பி.யுமான சுமலதா, அம்பரீஷ் இருந்த இருக்கையில் அமர்ந்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மண்டியா,
மண்டியாவில் எம்.பி. அலுவலகத்தை திறந்துவைத்த நடிகையும், எம்.பி.யுமான சுமலதா, அம்பரீஷ் இருந்த இருக்கையில் அமர்ந்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
எம்.பி. அலுவலகம் திறப்பு
மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் நடிகை சுமலதா அம்பரீஷ், சுயேச்சையாக போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மண்டியாவில் எம்.பி. அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் நடிகை சுமலதா எம்.பி. கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்துவைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அம்பரீஷ் அமர்ந்த இருக்கை
இன்றைய தினம் நல்ல நாள். இந்த அலுவலகத்தில் அம்பரீஷ் எம்.பி.யாக இருந்த போது பணியாற்றியுள்ளார். அம்பரீஷ் அமர்ந்து பணியாற்றிய இருக்கையில் அமர்ந்து நான் பணியாற்றுவது என்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். எனது பெயரில் சிலர் போலி முகநூல் பக்கங்களை உருவாக்கி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். சில போலி முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டு விட்டது. ஆனால் போலி முகநூல் கண க்குகள் தொட ங்கி கருத்துகளை பதிவிட்டு எனது அரசியல் வாழ்க்கைக்கு சேதம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. நான் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டது குறித்து நான் எந்த கருத்தும் பதிவிடவில்லை.
மழை-வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நிதி ஒதுக்குவது சில காரணங்களால் தாமதமாகி வருகிறது. விரைவில் அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்து பொதுமக்கள் நிவாரண பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
மத்திய அரசு நிதி ஒதுக்கீடு
மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு எவ்வாறு நிதி ஒதுக்குகிறது என்பது எனக்கு தெரியவில்லை. அதுபோல் பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு எவ்வாறு நிதி ஒதுக்குகிறது என்பது பற்றியும் எனக்கு தெரியாது. மாநிலத்தில் தற்போது மாவட்ட பொறுப்பு மந்திரிகளை நியமிப்பது தாமதமாகி உள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள பா.ஜனதா விரைவில் மாவட்ட பொறுப்பு மந்திரிகளை நியமிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story