வெளிநாடு சென்று திரும்பிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
பால்வளத்துறையை மேம்படுத்த பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விட்டு நேற்று சிவகாசி திரும்பிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிவகாசி,
பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது துறையை மேம்படுத்த பல்வேறு நாடுகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கடந்த வாரம் சென்றார். அவர் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று சிவகாசி வந்தார். அப்போது அவருக்கு விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சிவகாசி மேற்கு ஒன்றிய செயலாளர் வேண்டு ராயபுரம் சுப்பிரமணியம், சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.பலராம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுடர்வள்ளி சசிக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வக்கீல் டி.கணேசன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் முத்துப்பாண்டியன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர்ஆரோக்கியராஜ், எம்.ஜி. ஆர். மன்ற துணைசெயலாளர் தெய்வம், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஆனையூர் ராஜசேகரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியம்மாள், இளம் பெண்கள் பாசறை வடப்பட்டி தனுஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை அருப்புக்கோட்டை பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். இதில் அருப்புக்கோட்டை நகர செயலாளர் சக்திவேல் பாண்டியன் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் சோலைசேதுபதி, பொதுக்குழு வீரசுப்பிரமணியம், அவை தலைவர் பம்பாய் மணி, நகர துணை செயலாளர் முனியசாமி, செயற்குழு உறுப்பினர் உமாமகேஸ்வரி, ராமர், ஜோதிகா ராஜேந்திரன், முன்னாள் அவை தலைவர் பொன்ராம், சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் தமிம் அன்சாரி, முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் சேரன் இஸ்மாயில், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சந்திரமோகன், முன்னாள் கவுன்சிலர்கள் செல்வேந்திரன், கலுசிவலிங்கம், பிரேமா மற்றும் சீனிவாசன், கருப்பசாமி, சதீஸ்குமார், சோலைராஜ், மணிகண்டன், பூமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
அருப்புக்கோட்டை ஒன்றியம் சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம் தலைமையில் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட மீனவரணி செயலாளர் மணிவண்ணன், மாணவரணி தலைவர் மோகன்வேல், குருந்தமடம் கூட்டுறவு சங்க தலைவர் மாரியப்பன் உள்பட ஒன்றிய நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுபோல் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு திருச்சுழி தொகுதி அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசுகள் வெடித்தும் சால்வைகள் அணிவித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் காரியாபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி ராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், திருச்சுழி வடக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட பொருளாளர் தேவர், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மாநில துணைச்செயலாளர் வீரேசன், விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் சரவணன், மாவட்ட கூட்டுறவு அச்சகம் சங்கத்தலைவர் சித்திக், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் கவுதம் ராஜா, காரியாபட்டி ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சின்ன போஸ், காரியாபட்டி ஒன்றிய அவைத்தலைவர் ஆவியூர் கிருஷ்ணன், நரிக்குடி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் தியாகராஜன், ஒப்பந்ததாரர் மல்லாங்கிணறு கணேசன் ஆகியோர் அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் விருதுநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ஆவியூர் ரமேஷ், மறைக்குளம் கூட்டுறவு வங்கி தலைவர் தர்மராஜ், முஷ்டகுறிச்சி கூட்டுறவு வங்கி தலைவர் போஸ், நாகனேந்தல் திருநாவுக்கரசு, கே.ஆலங்குளம் அபிஷேக் ஆதித்தன், நாசர் புளியங்குளம் கனகராஜ், நரிக்குடி ஒன்றிய துணைச்செயலாளர் வீரபாண்டி, வீரசோழன் ஊராட்சி செயலாளர் திருமூர்த்தி, நரிக்குடி ஓட்டுனர் அணி ஒன்றிய செயலாளர் பாப்பான்குளம் குணசேகரன், தொழிலதிபர் லட்சுமணன், நரிக்குடி ஒன்றிய இலக்கிய அணிசெயலாளர் ஜெயச்சந்திரன், ஒன்றிய துணை செயலாளர் தவமுத்து, அகத்தாகுளம் ஊராட்சி செயலாளர் கண்ணன், மீனாக்குளம் கிளை செயலாளர் போஸ், பட்டமங்கலம் முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் மனோகரன், மானூர் கிளை செயலாளர் ராஜாங்கம், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story