மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி மோதி விபத்து பெண்கள் உள்பட 3 பேர் பலி புனே அருகே பரிதாபம்


மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி மோதி விபத்து பெண்கள் உள்பட 3 பேர் பலி புனே அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 12 Sept 2019 4:30 AM IST (Updated: 12 Sept 2019 4:04 AM IST)
t-max-icont-min-icon

புனே அருகே தறிகெட்டு ஓடிய லாரி மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது. இதில்பெண்கள் உள்பட3 பேர் பலியானார்கள்.

புனே,

புனே அருகே தறிகெட்டு ஓடிய லாரி மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது. இதில்பெண்கள் உள்பட3 பேர் பலியானார்கள்.

தறிகெட்டு ஓடிய லாரி

புனே அருகே பிரகன்ட் பகுதியில் உள்ள லாவாலே பாட்டா பகுதியில் நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி தறிகெட்டு ஓடியது. அப்போது சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து பலமாக மோதியது. இதில் அந்த மோட்டார் சைக்கிள்களில் இருந்த 5 பேர் தூக்கி வீசப்பட்டனர்.

3 பேர் பலி

இந்த பயங்கர விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் பாட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் பலியான 3 பேரின் உடல்ளை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் பிரகன்ட் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story