மாவட்ட செய்திகள்

குமராட்சி அருகே, காதல் திருமணம் செய்த புதுப்பெண், தீயில் கருகி சாவு + "||" + Near Kumarakshi, New woman who married for love, Karuki death in fire

குமராட்சி அருகே, காதல் திருமணம் செய்த புதுப்பெண், தீயில் கருகி சாவு

குமராட்சி அருகே, காதல் திருமணம் செய்த புதுப்பெண், தீயில் கருகி சாவு
குமராட்சி அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண், தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
காட்டுமன்னார்கோவில், 

குமராட்சி அருகே உள்ள குருவாடி கிராமத்தை சேர்ந்தவர் குமார் மகள் திவ்யா(வயது 25). இவரும், நளன்புத்தூரை சேர்ந்த வீரபாண்டியன் என்பவரும் காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சம்பவத்தன்று திவ்யா, தனது வீட்டில் உள்ள சிம்னி விளக்கை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பற்றியது. இதில் தீக்காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திவ்யாவின் தாய் செல்வி குமராட்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திவ்யாவுக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. வீடு புகுந்து தாக்குதல், காதல் திருமணம் செய்த வாலிபரின் தந்தை சாவு - கொலை வழக்காக பதிவு, ஒருவர் கைது
சிவகங்கை அருகே காதல் திருமணம் செய்த வாலிபரின் வீடு புகுந்து தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த, அவரது தந்தை சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு சாவு - தக்கலை அருகே பரிதாபம்
தக்கலை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
3. தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த தம்பதி மர்ம கும்பலால் கொலை
தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த தம்பதி மர்ம கும்பலால் வீடு புகுந்து கொலை செய்யப்பட்டனர்.
4. பெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வரதட்சணை கொடுமை செய்ததாக பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளார்கள்.
5. கணவரின் குடும்பத்தினரை தாக்கி, காதல் திருமணம் செய்த பெண் காரில் கடத்தல்
கணவரின் குடும்பத்தினரை தாக்கி காதல் திருமணம் செய்த பெண்ணை காரில் கடத்தி சென்ற கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.