மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம்-மதுபாட்டில்கள் திருட்டு + "||" + In Gummidipoondi TASMAC Shop Break the lock Money Theft of wine bottles

கும்மிடிப்பூண்டியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம்-மதுபாட்டில்கள் திருட்டு

கும்மிடிப்பூண்டியில்  டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம்-மதுபாட்டில்கள் திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் மதுக்கடையின் பூட்டை உடைத்து ரொக்கப்பணம் மற்றும் மதுபாட்டில்களை அள்ளிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் உள்ள வளைக்குண்டு என்ற இடத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. நேற்று காலை அவ்வழியாக சென்ற பழனி (வயது 43) என்பவர் மதுக்கடையின் இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கடை திறந்து கிடப்பதை கண்டு கடையின் மேற்பார்வையாளரான குமாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.


இதனையடுத்து, குமார் அங்கு வந்து பார்த்தபோது, கடையில் இருந்த உயர்ரக மதுபாட்டில்கள் சிலவற்றையும், கல்லாப்பெட்டியில் இருந்த ரொக்கப்பணம் மற்றும் சில்லரை காசுகளையும் அள்ளிச்சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசுக்கு குமார் புகார் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடைக்கு நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் கடையின் வெளியில் இருந்த கண்காணிப்பு கேமராவை மேல் நோக்கி திருப்பி வைத்து விட்டு, உருட்டு கட்டையால் மின்சார மீட்டர் இணைப்பை அடித்து உடைத்து, கடையின் மின் இணைப்பை துண்டித்தது தெரியவந்தது. இதனையடுத்து கடையின் இரும்பு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கடையின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு திருட்டில் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்தது.

இந்த கடையில் ஏற்கனவே 2 முறை பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றதால், போலீசாரின் அறிவுறுத்தலின்படி கடை அமைந்து உள்ள பகுதியில் முழுமையாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது 3-வது முறையாக இங்கு திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பது போலீசாருக்கும், அப்பகுதி மக்களுக்கும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் மேலும் விசாரணை செய்து மர்ம நபர் களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பல்வேறு துறைகளில் நிலுவையில் உள்ள பணத்தை வட்டியுடன் வசூலிக்க வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
பல்வேறு துறைகளில் நிலுவையில் உள்ள பணத்தை வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
2. சூளகிரி அருகே, வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் நகை கொள்ளை
சூளகிரி அருகே வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
3. திருப்பத்தூர் அருகே, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை
திருப்பத்தூர் அருகே ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்தனர். தடுக்க முயன்ற சலூன் தொழிலாளியை அவர்கள் கம்பியால் தாக்கிவிட்டு தப்பியுள்ளனர்.
4. சமையல் மாஸ்டரை வழிமறித்து அரிவாள் வெட்டு; பணம்,செல்போன் பறிப்பு
ராமநாதபுரத்தில் சமையல் மாஸ்டரை வழிமறித்து அரிவாளால் வெட்டி பணம் மற்றும் செல்போனை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
5. மூங்கில்துறைப்பட்டு அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி -மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
மூங்கில்துறைப்பட்டு அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.