நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாமக்கல்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாரியப்பபிள்ளை வரவேற்று பேசினார். பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும். தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளோடு இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோஷங்களை எழுப்பினர்.
இதில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் முருக.செல்வராஜ், இளவேந்தன், கலைச்செல்வன், மலர்கண்ணன், அத்தியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குமரேசன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story