மாவட்ட செய்திகள்

லாலாபேட்டை அருகே, மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; தொழிலாளி பலி - 2 பேர் படுகாயம் + "||" + Motorcycles face to face Collision Worker killed 2 injured

லாலாபேட்டை அருகே, மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; தொழிலாளி பலி - 2 பேர் படுகாயம்

லாலாபேட்டை அருகே, மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; தொழிலாளி பலி - 2 பேர் படுகாயம்
லாலாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
லாலாபேட்டை, 

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள கணக்கம்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 48) கூலிதொழிலாளி இவர், நேற்று முன்தினம் இரவு லாலாபேட்டையில் இருந்து கணக்கம் பட்டிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

சிவலிங்கபுரம் என்ற இடத்தில் சென்றபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் மேலவிட்டுக்கட்டியை சேர்ந்த சிவசக்தி, பிரேம்குமார் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். இந்தநிலையில் எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த 3 பேரையும் ஆம்புலன்சு மூலம் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாஸ்கர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து சிவசக்தி, பிரேம்குமார் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரியநாயக்கன்பாளையம் அருகே, கார் மோதி 2 மூதாட்டிகள் பலி
பெரியநாயக்கன்பாளையம் அருகே கார் மோதி 2 மூதாட்டிகள் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம்குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
2. காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஓட்டல் தொழிலாளி பலி
சூளகிரி அருகே வனப்பகுதியில் காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஓட்டல் தொழிலாளி பலியானார்.
3. மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்: பழனி என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி
மடத்துக்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பழனி என்ஜினீயர் உள்பட 2 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
4. சங்ககிரி பகுதியில், இருவேறு விபத்துகளில் கொத்தனார் உள்பட 2 பேர் பலி
சங்ககிரி பகுதியில் நடந்த இருவேறு விபத்துகளில் கொத்தனார் உள்பட 2 பேர் பலியானார்கள்.
5. நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதல் பள்ளத்தில் விழுந்து கல்லூரி மாணவி பலி
ஆவடி அருகே நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால், அதில் சென்ற கல்லூரி மாணவி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை