சீனாபுரம் சந்தையில் ரூ.55 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
சீனாபுரம் சந்தையில் ரூ.55 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை ஆனது.
பெருந்துறை,
பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை மாட்டுச்சந்தை கூடும். அதன்படி நேற்று சந்தை கூடியது. இந்த சந்தைக்கு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்தநாய்க்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டு இருந்தன.
விர்ஜின் கறவை மாடுகள் 50-ம், இதே இன கிடாரி கன்றுகள் 75-ம், சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடுகள் 50-ம், இதே இன கிடாரி கன்றுகள் 125-ம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. தீவன பற்றாக்குறை காரணமாக, கிடாரி கன்றுகளின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்தது. அதே சமயம் கறவை மாடுகள் அதிக விலைக்கு விற்பனை ஆனது.
சீனாபுரம் சந்தையில், விர்ஜின் கறவை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும், சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடுகளில் மாடு ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்றுகளில் கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.18ஆயிரம் வரையிலும் விற்பனை ஆனது.
இந்த சந்தையில் ரூ.55 லட்சம் வரை மாடுகள் விற்பனை நடந்ததாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர். குன்னத்தூர், திங்களூர், ஊத்துக்குளி, சென்னிமலை, காஞ்சிக்கோவில், பூந்துறை, அறச்சலூர், பெருந்துறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் மாடுகளை விலை பேசி பிடித்து சென்றனர்.

Related Tags :
Next Story