மாவட்ட செய்திகள்

புளியங்குடி அருகேகல்லூரி மாணவர் தற்கொலைஒருதலைக்காதலால் விபரீதம் + "||" + Near Puliyankudi College student suicide

புளியங்குடி அருகேகல்லூரி மாணவர் தற்கொலைஒருதலைக்காதலால் விபரீதம்

புளியங்குடி அருகேகல்லூரி மாணவர் தற்கொலைஒருதலைக்காதலால் விபரீதம்
புளியங்குடி அருகே ஒருதலைக்காதலால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புளியங்குடி, 

புளியங்குடி அருகே ஒருதலைக்காதலால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

கல்லூரி மாணவர்

நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள திருவேட்டநல்லூரை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மகன் திருப்பதி (வயது 20). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். திருப்பதி ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணிற்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. இதனால் திருப்பதி மனவேதனையில் காணப்பட்டார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருப்பதி கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுதொடர்பாக சொக்கம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் திருப்பதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புளியங்குடி அருகே ஒருதலைக்காதலால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பூரில் செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. பொன்னமராவதி அருகே, கல்லூரி மாணவர் தற்கொலை
பொன்னமராவதி அருகே, கல்லூரி மாணவர் எலி மருந்தை (விஷம்) தின்று தற்கொலை செய்துக்கொண்டார்.
3. புதுக்கோட்டை அருகே ரெயில்முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை
புதுக்கோட்டை அருகே ரெயில்முன் பாய்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. பரங்கிப்பேட்டை அருகே, குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை - தேர்வு எழுதாததை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு
பரங்கிப்பேட்டை அருகே தேர்வு எழுதாததை பெற்றோர் கண்டித்ததால் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

அதிகம் வாசிக்கப்பட்டவை