மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் கத்தியால் குத்தப்பட்ட வாலிபர் சாவு; 4 பேர் கைது + "||" + youth Death by knife in Erode; 4 people Arrested

ஈரோட்டில் கத்தியால் குத்தப்பட்ட வாலிபர் சாவு; 4 பேர் கைது

ஈரோட்டில் கத்தியால் குத்தப்பட்ட வாலிபர் சாவு; 4 பேர் கைது
ஈரோட்டில் கத்தியால் குத்தப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,

கோவை மாவட்டம் வடபாவை காமராஜர் நகரை சேர்ந்தவர் பிரதீப் (வயது 32). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 12–ந் தேதி தனது நண்பர்களை பார்ப்பதற்காக ஈரோட்டுக்கு வந்தார். இரவு 11 மணிஅளவில் கருங்கல்பாளையம் கே.என்.கே.ரோடு பகுதியில் உள்ள ஒரு கடை முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரதீப்பை தாக்கியது. மேலும், அவர்கள் கத்தியால் பிரதீப்பின் தலை, முதுகு, மார்பு, காது உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் பிரதீப் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். உடனடியாக அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.


பிரதீப்பை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரதீப் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் ஏற்கனவே ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்த குப்புசாமியின் மகன் மணிகண்டன் (24), ஜானகி அம்மாள் லேஅவுட் பகுதியை சேர்ந்த அப்துல்லாவின் மகன் இப்ராகிம் என்ற பாலமுருகன்(24), ஜின்னா வீதியை சேர்ந்த சுலைமான்ஹசீன் (23), முத்தான் என்கிற முத்து (21) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் பிரதீப் சிகிச்சை பலனின்றி இறந்ததால், இதை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். முன்விரோதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாகனங்களில் வருபவர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை: தஞ்சையில், முகமூடி கொள்ளை கும்பல் தலைவன் கைது
தஞ்சை புறவழிச்சாலை பகுதியில் வாகனங்களில் வருபவர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டி வந்த முகமூடி கொள்ளையன் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து 10 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. புதுமாப்பிள்ளை கொலையில் 5 வாலிபர்கள் கைது - போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
புதுமாப்பிள்ளை கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். தங்களது நண்பர்களை கொலை செய்ய திட்டமிட்டதால் தீர்த்து கட்டியதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
3. மணல் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் லாரி டிரைவர் உள்பட 3 பேர் கைது
நாகர்கோவிலில் வாகன சோதனையின் போது மணல் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரி டிரைவர் உள்பட 3 பேர் ைகது செய்யப்பட்டுள்ளனர்.
4. கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் பணம் பறிப்பு பிரபல ரவுடி உள்பட 3 பேர் கைது
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் பணம் பறித்ததாக பிரபல ரவுடி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. வங்கி கொள்ளையில் வாலிபர் கைது: மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றிய போலீசார்
வங்கி கொள்ளையில் வாலிபர் கைது: மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றிய தனிப்படை போலீசார்.