குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள அய்யனார்குளத்துப்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள அய்யனார்குளத்துப்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் ஆழ்குழாய் கிணற்று மின் மோட்டார் கடந்த ஒரு மாதமாக பழுதாகி சீர் செய்யப்படவில்லையாம். இதனால் அப்பகுதியில் ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் வந்து அரியலூர்- ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த செந்துறை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம், செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story